இந்தியாவின் சொத்துகள் ஜப்தியில் இருந்து தப்பின ஒன்றிய அரசு தரும் ரூ.7,900 கோடியை வாங்கிக் கொள்ள கெய்ர்ன் சம்மதம் வெளிநாடுகளில் தொடர்ந்த வழக்குகள் வாபஸ்

கடந்த 2012ம் ஆண்டு முன் தேதியிட்ட  வருமான வரி விதிப்பு சட்டம் அமல்படுத் தப்பட்டது. இச்சட்டம் இந் தியாவின் வரி முறையை முன் தேதியிட்டு மாற்றியது. 2006-07ல் கெயரன் இந்தியாவில் யாவில் கார்ப்பரேட் நிறுவன மூலதன ஆதாயம் பெற்றதற்காக ரூ.10,000 கோடியை வரியாக செலுத்த வேண்டுமென கடந்த 2014ல் வருமான றை உத்தரவிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த கெய்ர்ன் நிறுவனம், பின்னர் அந்த தொகையை செலுத்தியது.

இதை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது கெய்ர்ன் நிறுவனம்
 கெய்ர்ன் நிறுவனத்திடம் வசூல் செய்த வருமான வரியில் ரூ.8,000 கோடியை திரும்ப வழங்க தீர்ப்பளித் தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய அரசின் சொத்துக்களை கையகப்படுத்த அனுமதி கோரி கெயரன் நிறுவனம் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, முன்தேதியிட்ட வருமான வரி ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம், ரூ.7,900 கோடி பாக்கி தொகையை கெய்ரன் நிறுவனத்திற்கு திருப்பி தருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது

சைமன் தாம்சன் லண்ட னில் அளித்த பேட்டி யில். . "இந்திய அரசின் யோசனையை எங்களின் பங்குதாரர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இத் திய அரசு வழங்குவதாக கூறும் 7900 கோடியை வாங்கிக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த தொகை கிடைக்கப் பெற்றதும். அடுத்த ஓரிரு நாளில் இந்திய அரசுக்கு எதிராக தொடர்ப்பட்ட அனைத்து வழக்கையும் வாபஸ் பெறுவோம்", என்றார்.

4இதன் மூலம், கெய்ர்ன் நிறுவனத்தின் ஏழு ஆண்டு காலசட்டப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஏர் இந்தியா வின் சொத்துகள் உட்பட அரசின் பல்வேறு சொத்துக்கள், ஜபதியில் இருந்து தப்பியுள்ளன.

Comments