கடி ஜோக்

1) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?
    ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...
    

2) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
    மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...
  

3) நண்பர் 1 : தினமும் நம்ம ரவி அவன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறானே அவ்வளவு பாசமா அவனுக்கு மனைவி மேல?
    நண்பர்  2 : மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!!!
    

4) மனைவி : ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!
    கணவன் : நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!
    

5) பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
    பாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி
போடணும்!
   பேரன் : போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?
  

6) டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே! முதல் உதவி என்ன செஞ்சீங்க?
   வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!!
    

7) 😂😁😀😀😀😀😀😁

8) Boy 1: மச்சான்... உங்க காலேஜ்'ல சுமாரா எத்தனை பிகர் இருக்கும்?
    Boy 2: எங்க காலேஜ்'ல எல்லாமே சுமாராத்தான் இருக்குண்டா மாப்ள...
   

9) காதலி :  டார்லிங்... எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா இருக்க சொல்றாரு....
    காதலன் : சரி... சரி... உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன் தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்....
   

10) கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்...
     பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்...
    

11) பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்...
    கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு....
    பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...
    .

12) ஹார்ட் அட்டாக்'னா என்ன?
பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்... அது உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்து கொட்டும்... அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓபன் பண்ணி ''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு...
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்.......

13😂😁😀

14)  நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?
       நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு!
     

15) அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?😳😳😳😜

Comments