மாவீரன் நெப்போலியனிடம் கற்றுக் கொள்ளுங்கள

"மாவீரன் நெப்போலியனிடம் கற்றுக் கொள்ளுங்கள் "

தனது இறுதி காலத்தில் வாட்டர் லூ போரில் தோற்று விட்டான்: ஆள் ரொம்ப குள்ளம்,  நெப்போலியனை கைது செய்து தனீ தீவிற்கு அனுப்பினார்கள்;

அங்கு இருக்கும் ஆங்கிலேய தளபதிகளுக்கு நெப்போலியன் எப்படி இருப்பான்? என்று பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது; ஆறடி உயரம்,ஆஜுபாகுவான தோற்றத்தை கற்பனை பண்ணி வைத்து இருந்தவர்களுக்கு, குள்ளமான உருவம், கை கால்களில்,நாள்பட்ட தோல்வியாதிகள்;  வருபவனை கண்டதும் சப்பென்று போய்விட்டது: :

:இவனா மாவீரன்? இவனா நெப்போலியன்??

இவனுக்கு விளையாட்டு காட்டவேண்டும் என முடிவு செய்து, ஒரு மிகப்பெரிய மேஜையில் விருந்து ஏற்பாடு செய்தார்கள் (நெப்போலியன் அமரும் நாற்காலிக்கு கீழே வெறும் சத்தம் மட்டும் வரகூடிய டம்மி வெடிகுண்டுபுதைக்கப்பட்டது) விருந்து தொடங்கி எல்லாரும் ஒயினை எடுத்து குடிக்க தொடங்கும் போது, மிகப்பெரிய சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது!!!

இந்த திட்டதை தீட்டிய தளபதிகளே தன்னிச்சையாக தங்கள் கைகளில் இருக்கும் கோப்பைகளை கீழே தவறவிட்டு விட்டார்கள்!!!! மறுபுறம் பார்த்தால் எந்த சலனமும் இல்லாமல் நெப்போலியன் ஒயினை குடித்து கொண்டு இருக்கிறான்!!!!

இவர்களுக்கோ ஆச்சரியம் ;அவனிடம் கேட்கிறார்கள்?

எப்படி உன் காலடியில் வெடிகுண்டு வெடித்தபோதும் நீ பதறவே இல்லையே???

அதற்கு நெப்போலியன் சொன்ன பதில்தான் சரித்திரத்தில் சாகாவரம் பெற்றது;

நீங்கள் எப்போது எனது கைகளில் ஒயின் கிளாஸை கொடுத்தீர்களோ. அந்த நிமிடத்தில் இருந்து என் வாழ்கையின் ஒரே லட்சியம் அந்த கிளாஸில் உள்ள ஒயினை குடிப்பதுதான்;அது முடியும்வரை உலகத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் எனக்கு அக்கறை கிடையாது!!!!

Comments