வீழ்வே னென்று நினைத் தாயோ?

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நானும்
வீழ்வே னென்று நினைத் தாயோ? உன்னை 
சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - எந்தன்
முன்னே  தீவினைப் பயன்கள் - இனி
எழாமல்  தடுத்திட  வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
மகிழ்ச்சி கொண்டிருக்கச் செய்வாய்..

- மகாகவி சுப்பிரமணிய பாரதி.

Comments