தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு கடத்த இருந்த ரூ.2.30 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டு உள் ளார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கன்டெய்னர் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும், சுங்கத்துறை அனுமதி பெற்ற கன்டெய்னர் முனையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு லாரிகளில் துறைமுகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம். இதற்காக சுங்கத்துறை அங்கீகாரம் பெற்ற கன்டெய்னர் முனையங்கள், தூத்துக்குடியில் 15க்கும் மேற்பட்டவை உள்ளன.
அதிகாரிகள் முன்னிலை கன்டெய்னர் முனையத்தில் இருந்து கடத்தல் பொருட்கள் அனுப்பப்ப டுவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகா ரிகள் விரைந்து சென்று சிப்காட்டில் உள்ள ஒரு கன்டெய்னர் முனையத் தில்சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த 2 கன்டெய்னர்களை சோதனையிட் டனர். அவற்றில் ஒன்றில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த கன்டெய்னரில் இருந்த 5.69 மெட்ரிக் டன் எடை யிலான செம்மரக்கட்டைகளை லாரி மற்றும் கன்டெய்னருடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.30 கோடியா கும். முதற்கட்ட விசார ணையில், இந்த செம்மரக் கட்டைகள் அனைத்தும் ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டு இருப்பதும், இங்கி ருந்து வேறு பொருட்கள் பெயரில்துபாய் துறைமுக மான ஜபல் அலிக்கு கடத் தப்பட இருந்ததும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் சுங்கத்துறையினருக்கு தொடர்பு உள்ளதா என் பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
Comments
Post a Comment