விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க 403.16 கோடி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்

சட்டப்பேரவை யில் தாக்கல் செய்யப்பட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் , 
கைத்தறி நெசவாளர் களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட் டத்தின்படி இரு மாதங் களுக்கு 200 அலகுகள் வரை அரசு வழங்கி வருகிறது. 2020-21ம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் 7.26 கோடி யினை அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இத்தொகை தமிழ்நாடு மின் உற்பத்தி மற் றும் பகிர்மான கழகத்திற்கு மானியமாக விடுவிக்கப்பட் டுள்ளது. மேலும், விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் படி இரு மாதங்களுக்கு 750 அலகு கள் வரை அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தால் 1,42,227 விசைத்தறி நெச வாளர் குடும்பங்கள் பயன டைந்துள்ளனர். 2020-21ம் ஆண்டு திருத்திய மதிப்பீட்டில் 383.96 கோடியினை அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இத்தொகை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகத்திற்கு மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021-22ம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்கென திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில் 403.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Comments