ஒரே நாடு ஒரே தேர்தல்

சுதந்திரத்திற்கு பின் புதிய அரசியலை சட்டத்தின் கீழ் முதல் தேர்தல் கடந்த 1952 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது அன்று முதல் 1967 வரை மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைக்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் ஆட்சிக் கவிழ்ப்பு உள்ளிட்ட சில காரணங்களால் சில மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் அமல்படுத்தப்படுவதால் வளர்ச்சி திட்ட பணிகளில் இடையூறு ஏற்படுவதால் இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது என அரசாங்கம் தெரிவிக்கிறது

ஏதாவது காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாமல் போனாலும் ஆட்சி கவிழ்ந்தாலும் புதிதாக தேர்தல் நடத்தி அரசை தேர்ந்தெடுக்கலாம் ஆனால் அந்த அரசு ஒன்றிய அரசு ஆட்சி காலம் வரை மட்டுமே தொடர முடியும்

வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Comments